TNPSC Thervupettagam

26 ஆவது BASIC அமைச்சர்கள் சந்திப்பு

May 26 , 2018 2279 days 632 0
  • 26 ஆவது BASIC (Brazil, South Africa, India and China) சுற்றுச்சூழல் அமைச்சர்களின் சந்திப்பு அண்மையில் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றது.
  • இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தன் இந்த சந்திப்பில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார்.
  • ஐ,நா–வின் பருவநிலை மாறுபாடு மீதான உடன்படிக்கை கட்டமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளின் மாநாட்டிற்கு அடுத்த தலைவராக போலந்தில் மைக்கேல் குர்டிகா மற்றும் BASIC நாடுகளின் அமைச்சர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
  • நான்கு மிகப் பெரிய புதிதாக தொழில்மயம் அடைந்த நாடுகளின் குழுவே புவி அரசியல் கூட்டணி (BASIC) ஆகும்.
  • இந்தியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்தக் குழுவில் உள்ளன. 2009-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இக்குழு தோற்றுவிக்கப்பட்டது.
  • பிற நாடுகளை கோபன்ஹெகன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட சமாதானப்படுத்த முயல்வதும், பருவநிலை மாறுபாட்டு தடுப்பிற்கான உதவித் தொகை மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வின் மீது பொது நிலைப்பாட்டைத் தோற்றுவிப்பதும் இதன் பணிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்