சரக்கு மற்றும் சேவை வரி (Good and Services Tax - GST) கவுன்சிலின் 27-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.
GST கவுன்சில்
GST-யின் தொழில்நுட்ப முதுகெலும்பான GST வலைப்பின்னலை (GST Network - GSTN) அரசுடைமை அமைப்பாக மாற்றுவதற்கான முன்மொழிவிற்கு ஒப்புதல் வழங்கியதோடு, புதிய மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரிவிவர அறிக்கை தாக்கல் செயல்முறையை (Return Filing Process) வெளியிட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் சர்க்கரை மீது மேல்வரி (Cess) விதிப்பதற்கான முடிவை தள்ளி வைத்துள்ளது.
GST வலைப்பின்னல் தற்போது
5% மத்திய அரசால் உரிமை கொள்ளப்பட்டுள்ளது.
5% மாநிலங்களால் (ஒட்டு மொத்தமாக) உரிமை கொள்ளப்பட்டுள்ளது.
மீதமுள்ள 51%, HDFC நிறுவனம், HDFC வங்கி, ICICI வங்கி, தேசிய பங்குச்சந்தை யுக்திசார் முதலீட்டு நிறுவனம் மற்றும் LIC வீட்டுவசதி நிதியியல் நிறுவனம் ஆகியவற்றால் உரிமை கொள்ளப்பட்டுள்ளது.