TNPSC Thervupettagam

27-வது GST கவுன்சில் கூட்டம்

May 10 , 2018 2392 days 878 0
  • சரக்கு மற்றும் சேவை வரி (Good and Services Tax - GST) கவுன்சிலின் 27-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.
  • GST கவுன்சில்
    • GST-யின் தொழில்நுட்ப முதுகெலும்பான GST வலைப்பின்னலை (GST Network - GSTN) அரசுடைமை அமைப்பாக மாற்றுவதற்கான முன்மொழிவிற்கு ஒப்புதல் வழங்கியதோடு, புதிய மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரிவிவர அறிக்கை தாக்கல் செயல்முறையை (Return Filing Process) வெளியிட்டுள்ளது.
    • பல்வேறு மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் சர்க்கரை மீது மேல்வரி (Cess) விதிப்பதற்கான முடிவை தள்ளி வைத்துள்ளது.
  • GST வலைப்பின்னல் தற்போது
    • 5% மத்திய அரசால் உரிமை கொள்ளப்பட்டுள்ளது.
    • 5% மாநிலங்களால் (ஒட்டு மொத்தமாக) உரிமை கொள்ளப்பட்டுள்ளது.
    • மீதமுள்ள 51%, HDFC நிறுவனம், HDFC வங்கி, ICICI வங்கி, தேசிய பங்குச்சந்தை யுக்திசார் முதலீட்டு நிறுவனம் மற்றும் LIC வீட்டுவசதி நிதியியல் நிறுவனம் ஆகியவற்றால் உரிமை கொள்ளப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்