வனப்பரப்பை அதிகரிப்பதற்காக 28 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
1,30,006 சதுர கி.மீ. புவிப் பரப்புடைய தமிழக மாநிலத்தில் தற்போது 23.8 சதவீதம் பரப்பளவிற்கு வனப்பகுதிகள் உள்ளன.
இதன் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் யூகலிப்டஸ் போன்ற மரங்களை அகற்றி 28 கோடி மரக் கன்றுகளை நடுவதற்கான இயக்கத்தில் அனைத்துத் துறை மற்றும் இதர சமூக நல மற்றும் தன்னார்வ (அரசு சாரா) அமைப்புகளும் பங்கேற்க உள்ளன.