அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களின் மீது அதிகபட்ச வரி விதிப்பை இந்தியா அறிவித்துள்ளது.
கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளைத் தவிர்த்து, உலகின் அனைத்து பிற நாடுகளிலிருந்தும் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படுகின்ற இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களின் இறக்குமதி மீது முறையே 25% மற்றும் 10% வரியினை விதிப்பது என 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிராக, அவற்றினால் உண்டாகும் வருவாய் இழப்பினை ஈடு செய்வதற்காக இந்த பதிலடியை இந்தியா மேற்கொண்டுள்ளது.