இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான 29-வது கடல்சார் எல்லைக்கோடு (Indo-Sri Lanka Maritime Boundary Line) சந்திப்பு இந்திய கடற்படைக் கப்பலான ‘சுமித்ராவில் நடைபெற்றது. இந்த சந்திப்பு இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ஜாப்னா மாவட்டத்தில் அமைந்துள்ள காங்கேசன் துறையில் ஆண்டுக்கு ஒருமுறை நடப்பதாகும்.
இந்த சந்திப்பானது இருநாட்டு கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளுக்கிடையே செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் உறவுகளைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
28-வது கடல்சார் எல்லைக்கோடு சந்திப்பு (Meeting) கடந்த ஆண்டு (2017) மே 19 அன்று இலங்கை கடற்படைக் கப்பலான ‘சயூராவில்’ நடைபெற்றது.