TNPSC Thervupettagam
February 25 , 2019 2104 days 664 0
  • பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவை பிப்ரவரி 24-ம் தேதியன்று தமிழ்நாடு முதல்வர் துவக்கி வைத்தார்.
    • இத்திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து சில விவசாயிகளுக்கு அத்திட்டத்தின் முதல் தவணையான 2000 ரூபாயை அவர் வழங்கினார். இத்திட்டத்தின் போது மத்திய மந்திரி பியூஸ் கோயலும் உடனிருந்தார்.
  • உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூரில் பிப்ரவரி 24-ம் தேதியன்று இடைக்கால நிதி அறிக்கையில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வருடாந்திர நிதி உதவித் தொகையாக 6000 ரூபாய் அளிக்கும் திட்டத்தை பிரதமர் துவங்கி வைத்தார்.
  • பிப்ரவரி 22-ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்திக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
    • இந்த நியமனத்தின் மூலம் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட அளவான 75-ல் 60 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
  • மத்திய தகவல் ஆணையம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இயந்திர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் ஒரு தகவல் என்று அறிவித்திருக்கின்றது.
    • எனவே தற்போது தேர்தல் ஆணையம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விலக்கு அளிக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் இயந்திர மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பற்றிய தகவல் அறியும் மனுவின் மீது தகவல் தெரிவிப்பதோ அல்லது மறுப்பதோ கட்டாயமாகின்றது.
  • தொழில்நுட்ப சேவைகள் நிறுவனமான டெலாய்ட், இந்தியாவில் 10 மில்லியன் அல்லது 1 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஒரு பயனுள்ள வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்களை சித்தப்படுத்தும் வேலையில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை அளிக்கவுள்ளது.
  • புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டுக் கூட்டமைப்பின் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஏற்கனவே உள்ள உலக சாதனையைத் தகர்த்த சௌரப் சவுத்ரி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • விலை மலிவான வீடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு வரியான 1 சதவிகிதத்துடன் சேர்த்து தற்சமயம் கட்டுமானத்தில் உள்ள வீடுகளின் மீதான 5 சதவிகித வரியை குறைத்திட ஜிஎஸ்டி குழு முடிவு எடுத்திருக்கின்றது.
    • வீடு கட்டுவதற்குத் தேவையான ஸ்டீல், சிமெண்ட் மற்றும் பெயின்ட் ஆகியவற்றின் மீதான வரிச் சலுகைகள் மூலம் கட்டுமான நிறுவனங்கள் லாபமடைவதாக கூறி அவற்றையும் இக்குழு திரும்பப் பெற்றிருக்கின்றது.
  • பீகாரின் பாரவுனியில் பாட்னா மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டினார்.
  • இந்திய வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்தியாவால் இலங்கையில் கட்டப்பட்ட 155 வீடுகள் அந்நாட்டின் தோட்டப் பகுதி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டன.
  • அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கானாவூரில் மூன்று நாட்கள் நடைபெறும் விவசாய தலைமைத்துவ மாநாட்டின் 4-வது பதிப்பு அங்கு திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறி முனையத்தில் நடைபெற்றது.
  • புதுதில்லியில் கால்பந்துப் போட்டியை நடத்தும் டெல்லி கால்பந்து அமைப்பால் முதலாவது கால்பந்து ரத்னா விருது 34 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற சுனில் சேத்ரிக்கு வழங்கப்பட்டது.
  • இமாச்சலப் பிரதேசம் அம்மாநிலத்தில் இரண்டாவது அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை தேர்வு செய்ய 2019 அலுவல் மொழி (திருத்தச் சட்டம்) மசோதாவை நிறைவேற்றியிருக்கின்றது.
  • புரோ வாலிபால் லீக்கின் துவக்கப் பதிப்பை காளிகட் ஹீரோஸ் அணியை வீழ்த்தி சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி வென்றுள்ளது.
  • தெலுங்கானா அரசாங்கம் நாராயண்பேட் மற்றும் முழுகு என்ற புதிய இரண்டு மாவட்டங்களின் உருவாக்கத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்திருக்கின்றது.
  • ஆப்கானிஸ்தானின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் சர்வதேச டிவென்டி 20 போட்டிகளில் தொடர்ச்சியான நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்