TNPSC Thervupettagam
May 9 , 2024 199 days 257 0
  • அறிவியலாளர்கள் லைசோசைம் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி 2D புரத ஒற்றை அடுக்கினை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
  • புரதத் திரட்சி தசை நோய் (அமிலாய்டோசிஸ்) போன்ற நோய்களைப் புரிந்து கொள்வதற்கான மாதிரிப் புரதமாக இது செயல்படுகிறது.
  • இந்த ஆராய்ச்சியானது அமிலாய்டோசிஸ் பற்றிய ஆழ்ந்தப் புரிதலுக்கு வழி வகுப்பது மட்டுமல்லாமல், நோய்த் தொற்று வழிமுறைகளை ஆய்வு செய்வதற்கான பல்துறை தளத்தையும் நிறுவுகிறது.
  • லைசோசைம் என்பது கண்ணீர், உமிழ்நீர், சளி போன்ற பல்வேறு உடல் சுரப்பு நீர்களில் காணப்படும் இயற்கையாக உருவாகும் நொதி ஆகும்.
  • பாக்டீரியாவுக்கு எதிரான உடலின் பாதுகாப்பு அமைப்பில் இது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • அமிலாய்டோசிஸ் என்பது அமிலாய்டு எனப்படும் புரதமானது பல்வேறு உறுப்புகளில் திரள்வதால் ஏற்படும் ஓர் அரிய பாதிப்பு நிலையாகும்.
  • இதயம், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், நரம்பு மண்டலம் மற்றும் செரிமானப் பாதை போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை இந்த திரளாக்கம் மோசமாக பாதித்து, இறுதியில் பல்லுறுப்பு செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்