TNPSC Thervupettagam

2வது தேசியப் பல்பரிமாண வறுமைக் குறியீடு

July 20 , 2023 369 days 223 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, ‘தேசியப் பல்பரிமாண வறுமைக் குறியீடு: முன்னேற்ற நிலை குறித்த மறுமதிப்பீடு 2023’ என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள பல்பரிமாண ஏழ்மை நிலையில் உள்ள நபர்களின் எண்ணிக்கையில் 9.89 சதவீதம் என்ற குறிப்பிடத் தக்க அளவில் சரிவடைந்துள்ளது.
  • 2015-16 ஆம் ஆண்டில் 24.85% ஆக இருந்த இந்த எண்ணிக்கையானது 2019-2021 ஆம் ஆண்டில் 14.96% ஆகக் குறைந்துள்ளது.
  • அந்தக் காலகட்டத்தில் சுமார் 13.5 கோடி மக்கள் பல்பரிமாண வறுமை நிலையில் இருந்து மீண்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • கிராமப்புறங்களில் உள்ள வறுமை நிலையானது, 32.59 சதவீதத்திலிருந்து 19.28% ஆக அதிவிரைவாகக் குறைந்துள்ளது.
  • டெல்லி, கேரளா, கோவா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ளதைப் போலவே, பல்பரிமாண வறுமை நிலையை எதிர் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
  • பீகார், ஜார்க்கண்ட், மேகாலயா, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்த மக்கள்தொகையில் பல்பரிமாண ஏழ்மை நிலையில் உள்ள நபர்களின் எண்ணிக்கையின் சதவீதமானது அதிகமாக உள்ளது.
  • நகர்ப்புறங்களில் உள்ள பல்பரிமாண வறுமை நிலையானது 8.65 சதவீதத்திலிருந்து 5.27% ஆகக் குறைந்துள்ளது.
  • 3.43 கோடி மக்கள் பல்பரிமாண வறுமை நிலையிலிருந்து வெளி வந்துள்ளதுடன், உத்தரப் பிரதேசத்திலுள்ள ஏழ்மை நிலையிலுள்ள நபர்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிய அளவிலான சரிவு பதிவாகியுள்ளது.
  • 2015-16 மற்றும் 2019-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பல்பரிமாண வறுமைக் குறியீட்டின் மதிப்பானது 0.117 என்ற மதிப்பிலிருந்து 0.066 ஆக பாதியாகக் குறைந்து உள்ளதோடு, வறுமையின் தாக்கமானது 47 சதவீதத்திலிருந்து 44% ஆகக் குறைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்