இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரியச் சதுப்பு நிலமான ஆந்திரப் பிரதேசத்தின் கோரிங்கா வனவிலங்கு சரணாலயத்தில் (CWS) அருகி வரும் மீன்பிடிப் பூனை (பிரியோ நைலுரஸ் விவேரிநஸ்) காணப்படுகிறது.
மீன்பிடிப் பூனைகளின் முதன்முதல் கணக்கெடுப்பின் படி, 2018 ஆம் ஆண்டில், மீன்பிடி பூனைகளின் எண்ணிக்கை 115 ஆக இருந்தது.
மீன்பிடிப் பூனையின் இரண்டாவது கணக்கெடுப்பு ஆனது இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து வரும் மீன்பிடிப் பூனைக் கணக்கெடுப்பு ஆனது இந்தியாவின் முதல் மீன்பிடிப் பூனைகளுக்கான கழுத்துப் பட்டை அணிதல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தியா-டேஹ்ராடூன் வனவிலங்கு நிறுவனம் ஆனது கழுத்துப் பட்டை அணிவித்தல் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.