இந்திய பெருங்கடல் மாநாட்டின் 3வது பதிப்பு வியட்நாமின் தலைநகரான ஹனோய் நகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் 3வது மதிப்பை இந்திய அறக்கட்டளையானது
வியட்நாம் தூதரக அகாதெமி
எஸ்.ராஜரத்தினம் சர்வதேச ஆய்வுகளுக்கான பள்ளி (RSTS – Rajaratnam School of International Studies)
இலங்கை மற்றும் வங்காள தேச சர்வதேச மற்றும் யுக்திசார் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
பிராந்திய கட்டமைப்புகளை கட்டுதல் என்பது இதன் கரு ஆகும்.
இந்த மாநாடானது டெல்லியைச் சேர்ந்த சிந்தனைச் சாவடியான இந்திய அறக்கட்டளையில் சிங்கப்பூர், இலங்கை மற்றும் வங்காள தேசத்தில் உள்ள பங்காளர்களுடன் இணைந்து தொடங்கப்பட்ட வருடாந்திர மாநாடாகும்.
இது வரை மாநாட்டின் இரண்டு பதிப்புகள் முறையே சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் 2016, 2017ல் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.