3வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்
June 12 , 2023 530 days 368 0
2023 ஆம் ஆண்டு கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் ஆனது உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நிறைவடைந்தது.
பஞ்சாப் பல்கலைக்கழக அணியானது 26 தங்கம், 17 வெள்ளி மற்றும் 26 வெண்கலப் பதக்கங்களுடன் (மொத்தம் - 69 பதக்கங்கள்) பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
அமிர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலைக்கழக அணியானது, இந்த ஒட்டு மொத்தச் சாம்பியன்ஷிப் போட்டியில் 24 தங்கம், 27 வெள்ளி மற்றும் 17 வெண்கலத்துடன் (மொத்தம் 68 பதக்கங்கள்) இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
கடந்த ஆண்டு போட்டிகளின் சாம்பியனான கர்நாடகாவின் ஜெயின் பல்கலைக் கழக அணியானது, 32 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
நீச்சல் வீரர் சிவா ஸ்ரீதர் ஆடவர் பிரிவில் எட்டு தங்கம் உட்பட மொத்தம் 11 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தார்.
ஷ்ருங்கி பாண்டேகர் மகளிர் பிரிவில் ஐந்து தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்களை வென்றார்.
தமிழ்நாட்டின் சென்னைப் பல்கலைக் கழக அணியானது 7 தங்கம், 8 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களுடன் பட்டியலில் 9வது இடத்தைப் பெற்றுள்ளது.
மற்ற தமிழகப் பல்கலைக்கழகங்கள்: SRM பல்கலைக் கழகம் (37), பாரதியார் பல்கலைக் கழகம் (42) மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் (85) ஆகியவை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.