TNPSC Thervupettagam

3வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்

June 12 , 2023 402 days 302 0
  • 2023 ஆம் ஆண்டு கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் ஆனது உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நிறைவடைந்தது.
  • பஞ்சாப் பல்கலைக்கழக அணியானது 26 தங்கம், 17 வெள்ளி மற்றும் 26 வெண்கலப் பதக்கங்களுடன் (மொத்தம் - 69 பதக்கங்கள்) பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
  • அமிர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலைக்கழக அணியானது, இந்த ஒட்டு மொத்தச் சாம்பியன்ஷிப் போட்டியில் 24 தங்கம், 27 வெள்ளி மற்றும் 17 வெண்கலத்துடன் (மொத்தம் 68 பதக்கங்கள்) இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • கடந்த ஆண்டு போட்டிகளின் சாம்பியனான கர்நாடகாவின் ஜெயின் பல்கலைக் கழக அணியானது, 32 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
  • நீச்சல் வீரர் சிவா ஸ்ரீதர் ஆடவர் பிரிவில் எட்டு தங்கம் உட்பட மொத்தம் 11 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தார்.
  • ஷ்ருங்கி பாண்டேகர் மகளிர் பிரிவில் ஐந்து தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்களை வென்றார்.
  • தமிழ்நாட்டின் சென்னைப் பல்கலைக் கழக அணியானது 7 தங்கம், 8 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களுடன் பட்டியலில் 9வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • மற்ற தமிழகப் பல்கலைக்கழகங்கள்: SRM பல்கலைக் கழகம் (37), பாரதியார் பல்கலைக் கழகம் (42) மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் (85) ஆகியவை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்