இரண்டு நாட்கள் அளவிலான பலதரப்பு கடல்சார் பயிற்சியான லா பெரூஸ் இந்தியப் பெருங்கடலில் நடைபெற்றது.
பிரெஞ்சுக் கடற்படையானது இந்தப் பயிற்சியின் பொறுப்பினை ஏற்று நடத்தியது.
இந்த நிகழ்வில் ஆஸ்திரேலியக் கடற்படை, பிரெஞ்சுக் கடற்படை, இந்தியக் கடற்படை, ஜப்பானியப் படை மற்றும் அமெரிக்கப் படை ஆகியவற்றின் பணியாளர்கள், கப்பல்கள் மற்றும் ஒருங்கிணைப்பு ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.
இது பங்கேற்பாளர் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே கடல்சார் நடவடிக்கை ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.