பாங்க் ஆப் இந்தியா, மகாராஷ்டிரா வங்கி மற்றும் ஓரியண்டல் வர்த்தக வங்கி ஆகிய மூன்று வங்கிகளின் மீதான செயல்பாட்டுத் தடைகளை விலக்கிக் கொண்டதோடு “உடனடி சரிசெய்யும் செயல் நடவடிக்கைக் கட்டமைப்பிலிருந்து” அவை முழுமையாக வெளியேறிட அவ்வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருக்கின்றது.
மிகப்பெரிய அளவிற்கு கடன்களை வழங்குவது, பங்கு ஆதாயங்களைப் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றின் மீது தடைகளை விதிக்கின்ற “உடனடி சரிசெய்யும் செயல் நடவடிக்கை கட்டமைப்பின்” கீழ் கொண்டு வரப்பட்ட 11 பொதுத் துறை வங்கிகளில் இந்த மூன்று வங்கிகளும் அடங்கும்.