TNPSC Thervupettagam

3 FDC மருந்துகள் மீதான தடை நீக்கம்

September 20 , 2018 2258 days 687 0
  • உச்ச நீதிமன்றமானது ‘குறிப்பிட்ட அளவு கலவை மருந்துகளான’ சாரிடான், பிரிட்டான் (இருமல், சளி நீக்க மருந்து) மற்றும் டார்ட் ஆகிய 3 மருந்துகளுக்கான தடையை நீக்கி விற்பனையை அனுமதித்துள்ளது.
  • இவையனைத்தும் 1988 ஆம் ஆண்டிற்கு முன்பிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. எனவே தடை செய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் இருந்து இவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டுமென வாதிடப்பட்டது.
  • இந்த மருந்துகள் செப்டம்பர் 12-ல் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தினால் விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடைசெய்யப்பட்ட 328 FDC (Fixed Dose Combination) மருந்துகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
  • FDC மருந்துகள் என்பவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகள் ஒரு நிலையான விகிதத்தில் ஒரே மருந்தாக இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்