3-ஆம் நூற்றாண்டிலேயே பூஜ்ஜியத்தை பயன்படுத்திய இந்தியர்கள் - ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வில் தகவல்
September 18 , 2017 2672 days 971 0
பாகிஸ்தானில் உள்ள பக்சாலி பகுதியில் இருந்து ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஓலைச்சுவடிகள் “கார்பன் டேட்டிங்’ (கதிரியக்க கார்பன் மூலம் காலத்தைக் கணிப்பது) முறையில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வில் மறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, இந்த ஓலைச்சுவடிகள் 3-ஆம் நூற்றாண்டு அல்லது 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம், மூன்றாம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே பூஜ்ஜியத்தை இந்தியர்கள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது
இதற்கு முன்பு 8-ஆம் நூற்றாண்டில்தான் இந்தியர்கள் பூஜ்ஜியத்தைப் பயன்படுத்தினார்கள் என்று பிற ஆய்வு முடிவுகள் தெரிவித்திருந்தன.