TNPSC Thervupettagam

3 திருநங்கைகளுக்கு காவலர் பதவி - தமிழ்நாடு அரசு

October 31 , 2017 2452 days 873 0
  • இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு மூன்றாவது பாலினத்தவரை காவல் துறையில் சேர்க்கும் முடிவை உறுதிசெய்த பின்பு கூடலூரிலிருந்து தாட்சாயினி, கிருஷ்ணகிரியிலிருந்து பிரபா மோகன் மற்றும் ராமநாதபுரத்திலிருந்து ஜெகதீஸ்வரன் என்ற நஸ்ரியா ஆகிய மூவரும் காவல்துறையில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • மூன்றாவது பாலினத்தவருக்கு தேவையான வசதிகளை காவல்துறை பயிற்சி கல்லூரி ஏற்பாடு செய்துவருகிறது. இவர்களுக்கு பெண் பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி அளிக்கப்படும்.
  • தமிழ்நாடு காவல்துறையானது ஆண்களுக்கு என்று 10,500 பணி இடங்களுக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.
  • திருநங்கையரும் இந்த காலியிடங்களுக்கான பணிவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். எனினும், அவர்கள் ஆண்களுக்கான உடல் சார்ந்த தகுதி கூறுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
  • முன்பு காவல்துறையில் திருநங்கைகள் பெண் காவலர்களாக பணியமர்த்தப்பட்டு, பின்பு அவர்கள் தங்களின் பாலினத் தன்மையை வெளிக்காட்டியபின்பு பலர் பதவியிலிருந்து விலக்கப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்