இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு மூன்றாவது பாலினத்தவரை காவல் துறையில் சேர்க்கும் முடிவை உறுதிசெய்த பின்பு கூடலூரிலிருந்து தாட்சாயினி, கிருஷ்ணகிரியிலிருந்து பிரபா மோகன் மற்றும் ராமநாதபுரத்திலிருந்து ஜெகதீஸ்வரன் என்ற நஸ்ரியா ஆகிய மூவரும் காவல்துறையில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மூன்றாவது பாலினத்தவருக்கு தேவையான வசதிகளை காவல்துறை பயிற்சி கல்லூரி ஏற்பாடு செய்துவருகிறது. இவர்களுக்கு பெண் பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழ்நாடு காவல்துறையானது ஆண்களுக்கு என்று 10,500 பணி இடங்களுக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.
திருநங்கையரும் இந்த காலியிடங்களுக்கான பணிவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். எனினும், அவர்கள் ஆண்களுக்கான உடல் சார்ந்த தகுதி கூறுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
முன்பு காவல்துறையில் திருநங்கைகள் பெண் காவலர்களாக பணியமர்த்தப்பட்டு, பின்பு அவர்கள் தங்களின் பாலினத் தன்மையை வெளிக்காட்டியபின்பு பலர் பதவியிலிருந்து விலக்கப்பட்டனர்.