எவரெஸ்ட் மலையின் உச்சியை அடையும் ஒரு முயற்சியின் போது கடந்த 10 நாட்களில் “கூட்ட நெரிசல்” அல்லது “அதிக நபர்கள் கூடுதல்” என்ற நிகழ்வின் காரணமாக 3 இந்தியர்கள் உள்பட 11 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உயரம் அதிகரிக்கும் போது ஏற்படும் நோய்கள், குறைவான ஆக்ஸிஜன் உள்ள இடத்தில் நீண்ட நேரம் காத்திருத்தல், மிகவும் கடுமையான நிலப்பரப்பு மற்றும் பனிக்கட்டி உள்ள இடத்தில் நீண்ட வரிசையில் காத்திருத்தல் ஆகியவைகளின் காரணமாக இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
நேபாள அரசினால் வழங்கப்பட்ட கட்டுப்பாடற்ற உரிமங்களினால் இந்த இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.