30 GW அளவிலான பசுமை சார் ஆற்றல் 2024
January 17 , 2025
6 days
54
- கடந்த ஆண்டு இந்தியா புதிதாக சுமார் 30 GW (ஜிகாவாட்) அளவிலான புதுப்பிக்கத் தக்க ஆற்றல் உற்பத்தி திறனை நிறுவியுள்ளது.
- 2023 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 13.75 GW என்ற அளவுடன் ஒப்பிடும் போது இது 113 சதவீதம் அதிகமாகும்.
- இந்த விரிவாக்கத்துடன், இந்தியாவின் மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன் ஆனது 218 ஜிகாவாட்டினை எட்டியுள்ளது.
- 2030 ஆம் ஆண்டிற்குள் 500 GW அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறனை அடைவதை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.
- இந்த இலக்கை அடைவதற்கு, இந்தியா அடுத்த ஆறு ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 50 GW அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை நிறுவ வேண்டும்.
Post Views:
54