நாசாவின் சந்திரா X கதிர் என்ற ஆய்வகமானது 30 டோராடஸ் B என்ற மீவொளிர் விண்முகிலின் கண்கவர் காட்சியினைப் படம் பிடித்துள்ளது.
இது சுமார் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நட்சத்திரங்கள் உருவாகி வரும் விண்வெளியின் செயல்பாடுகள் மிகுந்த பகுதியின் ஓர் அங்கமான ஒரு மீவொளிர் விண்முகிலின் எஞ்சிய பகுதியாகும்.
இது பூமியிலிருந்து சுமார் 160,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பெரிய சீரற்ற பெரு விண்மீன் திரளில் (மாகெல்லானிக் கிளவுட்) அமைந்துள்ளது.