TNPSC Thervupettagam

3000 ஆண்டுகள் பழமையான நகரம்

January 22 , 2024 306 days 266 0
  • அமேசான் மழைக்காடுகளின் செழிப்பான தாவரங்களால் மறைக்கப்பட்ட ஒரு பெரிய நகரம் ஈக்வடாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • உபனோ பள்ளத்தாக்கில் உள்ள பண்டைய நகரத்தில் உள்ள வீடுகள் மற்றும் அரங்கங்கள் சாலைகள் மற்றும் கால்வாய்களின் வலையமைப்பால் இணைக்கப் பட்டிருந்தன.
  • இந்தப் பகுதி வளமான மண்ணை உருவாக்கிய ஒரு எரிமலையின் மலைமறைவு பகுதியில் உள்ளது.
  • அமேசானில் நமக்குத் தெரிந்த மற்ற தளங்களை விட இது பழமையானது ஆகும்.
  • இந்த நகரம் அமேசானில் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பிற கொலம்பியனுக்கு முந்தையப் பகுதியை விட 3,000 முதல் 1,500 ஆண்டுகள் பழமையானது.
  • அங்கு மக்கள் கிபி 1,000 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாகவும் அந்தக் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.
  • LiDAR எனப்படும் பிரபலத் தொலை உணர்வி முறையினைப் பயன்படுத்தி இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டது.
  • இது தொலைவினை அளவிடுவதற்கு ஒளியைப் பயன்படுத்துகிறது என்பதோடு, மேலும் இது லேசர் (ஒளிக்கற்றை) ஊடறிதல் அல்லது முப்பரிமாண ஊடறிதல் என்றும் அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்