உலகின் மலிவான கைபேசி இணையதள சேவை
March 8 , 2019
2088 days
733
- விலை ஒப்பீட்டுத் தளமான cable.co.uk என்ற இணைய தளத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தியா உலகின் மிகவும் மலிவான கைபேசி இணையதள சேவையைக் கொண்டுள்ளது.
- இணையதள சேவையின் உலக சராசரி விலையான ரூ.600 உடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 1 ஜிபி இணையதள சேவையின் மதிப்பு ரூ.18.5 (USD 0.26) மட்டுமே ஆகும்.
- இதே நிலையில் ஐக்கிய இராஜ்ஜியம் போன்ற நாடுகளில் 1 ஜி.பி. இணையதள சேவையின் மதிப்பு USD 12.37 ஆகும்.
- சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய திறன்பேசி சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவில் 4.30 மில்லியன் மக்கள் திறன்பேசியைப் பயன்படுத்துகின்றனர்.
- இந்தியாவிற்கு அடுத்த இடங்களில் கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உக்ரைன் மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் உள்ளன.
Post Views:
733