குறிப்பிடப்படாத காரணங்களுக்காக 31 வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs/ Non-Banking Finance Companies) பதிவுச் சான்றிதழை இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI – Reserve Bank of India) ரத்து செய்துள்ளது.
உரிமங்களை இழந்த இந்த 31 நிறுவனங்களில் பெரும்பான்மையாக 27 நிறுவனங்கள் மேற்கு வங்காளத்திலிருந்தும் அதனைத் தொடர்ந்து 4 உரிமங்களை இழந்த நிறுவனங்கள் உத்திரப் பிரதேசத்தையும் சேர்ந்தவையாகும்.
இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிக்கல் வாய்ந்த கடன் வழங்குநரான IL&FS என்ற நிறுவனத்தால் கடன் திரும்ப செலுத்தப்படாததை அடுத்து NBFC துறையானது பணப்புழக்கச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.