31வது சாலைப் பாதுகாப்பு வாரமானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டின் தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தின் கருத்துரு, ‘இளைஞர்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வருதல்’ என்பதாகும்.
சாலைப் பாதுகாப்பு வார அனுசரிப்பானது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
இது 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசியப் பாதுகாப்பு மன்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
சுந்தர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேசிய சாலைப் பாதுகாப்புக் கொள்கைக்கு இந்தியாவின் மத்திய அமைச்சரவையானது 2010 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று ஒப்புதல் அளித்தது.
2020 ஆம் ஆண்டில் நாட்டின் சாலை இறப்பு விகிதத்தை 50 சதவீதமாகக் குறைக்க உறுதியளிக்கும் பிரேசிலியா பிரகடனத்தில் இந்தியா 2015 ஆம் ஆண்டில் கையொப்பமிட்டது.