32வது வருடாந்திர சுரஜ்குந் சர்வதேச கலை பொருட்கள் மேளா ஹரியானா மாநிலத்தின் சுரஜ்குண்ட்-ல் நடத்தப்பட்டது.
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் கைவினைப் பொருட்களின் பல்வகைத் தன்மை மற்றும் செறிவினை காட்சிப்படுத்துவதற்காக 1987ஆம் ஆண்டிலிருந்து இந்த வருடாந்திர திருவிழாவானது நடத்தப்படுகின்றது.
இவ்வாண்டு இத்திருவிழாவானது கிர்கிஸ்தான் நாட்டுடன் இணைந்து சுரஜ்குந் மேளா ஆணையம், மத்திய கலாச்சாரம், சுற்றுலா மேம்பாடு, வெளியுறவுத் துறை, ஜவுளித்துறை அமைச்சகம் ஆகியவற்றால் நடத்தப்பட்டுள்ளது.