TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 21 , 2019 2049 days 630 0
  • சர்வதேசக் கப்பற் படைப் பயிற்சி (IFR - International Fleet Review) என்பது போர்க் கப்பல்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் அணிவகுப்பாகும். இது நல்லிணக்கம், ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அவர்களின் நிறுவனத் திறன்களை வெளிப்படுத்துவதற்காக நாடுகளால் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டில் சீனாவில் நடைபெறவிருக்கும் IFR-ல் இந்தியக் கப்பற் படையைச் சேர்ந்த போர்க் கப்பல்களான ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஐஎன்எஸ் சக்தி ஆகியவை கலந்து கொள்ளவிருக்கின்றன.
  • இந்திய வணிகச் சமூகத்திற்கு ராஸ் அல் கைமாஹ் பொருளாதார மண்டலத்தின் (RAKEZ - Ras Al Khaimah Economic Zone) பிரத்தியேக பெரு நிறுவனத் தூதுவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ராஸ் அல் கைமாஹ் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கும் ஏழு அமீரகங்களில் ஒன்றாகும்.
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி அமைதிக் காப்பு நடவடிக்கைகளுக்காக 38 மில்லியன் அமெரிக்க டாலரை ஐக்கிய நாடுகள் இந்தியாவிற்கு வழங்குகிறது. இதுவரை அந்த அமைப்பானது இந்த நடவடிக்கைக்காக இவ்வளவு பெரிய தொகையை எந்தவொரு நாட்டிற்கும் வழங்கவில்லை.
  • முதன்முறையாக போலந்து நாட்டைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் நோயாளியின் குறுகிய இருதய வால்வைத் திறந்து, அவருடைய மார்பின் உட்பகுதியைப் பார்ப்பதற்காக முப்பரிமாண கண்ணாடிகளைப் பயன்படுத்தினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்