32வது உலக நிதி மையக் குறியீடு
October 5 , 2022
783 days
382
- உலகின் முதல் மூன்று நிதி மையங்களாக நியூயார்க், இலண்டன் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை திகழ்கின்றன.
- இலண்டனில் உள்ள Z/யென் குழுமமும், ஷென்செனில் உள்ள சீன மேம்பாட்டு நிறுவனமும் கூட்டாக இணைந்து இதனை வெளியிட்டுள்ளன.
- இது ஆண்டிற்கு இருமுறை வெளியிடப் படுகிறது.
- இதில் கடந்த நான்கு ஆண்டுகளாக நியூயார்க் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
- இதில் ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்து உள்ளது.
- அதே சமயம் இதில் ஹாங்காங் நான்காவது இடத்தில் உள்ளது.
- இந்தத் தரவரிசையில் சான் பிரான்சிஸ்கோ ஐந்தாவது இடத்தில் உள்ளது.
- இதில் டோக்கியோ நகரைப் பின்னுக்குத் தள்ளி பாரீஸ் நகரம் முதல் 10 இடங்களுக்குள் மீண்டும் இடம் பெற்றுள்ளது.
- இதில் மாஸ்கோ 22 இடங்கள் சரிந்து 73வது இடத்தினைப் பெற்றுள்ளது.
- இந்தியாவில், புது டெல்லி மற்றும் மும்பை ஆகியவை முறையே 68வது மற்றும் 70வது இடத்தில் உள்ளன.
Post Views:
382