TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 18 , 2019 1891 days 733 0
  • கேரள மாநில சட்ட சபையானது இ-விதான் என்ற தனது புகழ்மிக்கதொருத் திட்டத்தின் கீழ், தனது அனைத்துப் பதிவுகள் மற்றும் நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ஒரு முன்னெடுப்பை சமீபத்தில் அறிவித்துள்ளது. E-விதான் என்ற திட்டம் மாநில சட்டசபை முழுவதையும் டிஜிட்டல் மயமாகவும் காகிதமற்றதாகவும் மாற்றுவதற்கு எண்ணுகின்றது.
    • இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்படும் அறிவிப்புகள், கேள்வி-பதில், சபையில் நடைபெறும் அலுவல்கள் மற்றும் சபை தொடர்பானவை போன்ற அனைத்து சட்டமன்ற நடைமுறைகளும் காகிதமற்ற முறையில் செயல்படவிருக்கின்றன.
  • 1990 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆணடு வரை 29 ஆண்டுகளாக இந்தியாவில் கிழக்குக் கடற்கரையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றிய “விக்ரகா” என்ற இந்தியக் கடலோரப் பாதுகாப்புக் கப்பலானது (ICGS - Indian Coast Guard ship) விசாகப்பட்டினத்தில் பணியிலிருந்து விலக்கப்பட்டது.
    • இது மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட ஏழாவது கடல் ரோந்துக் கப்பலாகும். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்தியக் கப்பற்படை வீரர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் இல்லாமல் இந்தக் கப்பல் மட்டும் இலங்கை கப்பற்படைக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
  • நாடுகளுக்கான சேவைகள் வர்த்தக கட்டுப்பாட்டுடைமைக் குறியீட்டிற்கு (STRI - Services Trade Restrictiveness Index) பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பினால் (Organisation for Economic Cooperation and Development - OECD) ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையானது முரண்பட்டதாகவும் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு சாதகமாக இருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
    • இந்திய சேவைகள் துறையானது அந்நிய நேரடி முதலீடு போன்ற பகுதிகளில் மிகவும் கட்டுப்பாடு உள்ளவையாக உள்ளது என்று STRI தரவரிசையானது காட்டுகின்றது. ஆனால் 1991 ஆம் ஆண்டில் எல்பிஜி முறைக்குப் (தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல்) பின்பு மிகவும் தாராளமயமாக்கப்பட்ட விதிமுறைகளில் ஒன்று அந்நிய நேரடி முதலீடாகும்.
  • இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனமானது (GSI - Geological Survey of India) தனது அறிக்கையில் இந்தியாவில் மொத்த கிராபைட் வளங்களில் 35 சதவிகிதத்திற்கும் மேல் அருணாச்சலப் பிரதேசத்தில் காணப்படுகிறது என்று கூறியுள்ளது. இதுவே நாட்டில் கிராபைட் அதிக அளவில் கண்டெடுக்கப் பட்டுள்ள இடங்களில் ஒன்றாகும்.
    • GSI ஆனது இரயில்வேயிற்கு நிலக்கரி இருப்புகளைக் கண்டறிவதற்காக 1851 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • இந்தியா முதன்முறையாக “இராணுவ சாரணர் மாஸ்டர்ஸ் போட்டியை” (ASMC - Army Scouts Masters competition) நடத்தவிருக்கின்றது. இந்தப் போட்டியானது 2019 ஆம் ஆண்டில் ஜூலை இறுதியிலிருந்து ஆக்ஸ்ட் மாதத்தின் பாதி வரை ஜெய்சால்மர் இராணுவ நிலையத்தில் இந்திய இராணுவத்தின் “கோனார்க் படையினால்” நடத்தப்படவிருக்கின்றது.
    • ASMC ஆனது 2015 ஆம் ஆண்டு முதல் நோவோசிபிர்ஸ்க் பகுதியில் உள்ள கோல்ட்சோவோ பயிற்சி மைதானத்தில் ரஷ்யாவினால் நடத்தப்படும் சர்வதேச இராணுவ விளையாட்டுகளின் ஒரு பகுதியாகும். அது தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியா அதில் கலந்து கொண்டுள்ளது.
  • காண்டாமிருக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகமானது இந்தியாவில் உள்ள அனைத்து காண்டாமிருகங்களின் டிஎன்ஏ வடிவங்களை உருவாக்குவதற்கான ஒரு திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
    • 90 சதவிகிதத்திற்கும் மேலான காண்டாமிருகங்கள் அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ளன. வேட்டையாடுவதிலிருந்து அவற்றைப் பாதுகாப்பதற்காகவும அவற்றின் வாழிடங்களைப் பாதுகாப்பதற்காகவும் அரசாங்கம் இவற்றில் சிலவற்றை மானஸ் தேசியப் பூங்கா மற்றும் போபிதரா வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றிற்கு இடம் மாற்ற முயற்சி எடுத்து வருகின்றது.
  • சர்வதேச மருந்துகள் ஆய்வு நிறுவனத்தின் (Global Drugs Survey – GDS) 8-வது வருடாந்திர ஆய்வு அறிக்கையானது இந்தியர்களை முதன்முறையாக ஆய்வு செய்து, அதில் மது பானங்களை எடுத்துக் கொள்வதைக் குறைப்பதற்கு மற்ற நாடுகளைவிட இந்தியர்கள் அதிக உதவியை எதிர்பார்க்கின்றனர் என்பதைக் கண்டறிந்துள்ளது.
    • GDS ஆனது பொழுதுபோக்கு போதைப் பொருள் பற்றிய மிகப்பெரிய சர்வதேசக் கணக்கெடுப்பை நடத்துகின்றது. இது வழக்கமான போதைப் பொருள் பயன்பாட்டாளர்கள் மற்றும் போதைப் பொருள்களை ஏற்றுக் கொள்வதில் புதிய முறைகளை முன்பே ஏற்றுக் கொண்டவர்கள் ஆகியோரிடையே ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டின் போக்குகள் குறித்த ஒரு அநாமதேய மற்றும் நிகழ்நேர ஆய்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்