2019 ஆம் ஆண்டு ஜுன் 07 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக பூடான் நாட்டிற்குச் சென்றடைந்தார்.
ரஜபுத் இனத்தைச் சேர்ந்த மாவீரரான மகாராணா பிரதாப்பின் 479-வது பிறந்த தினம் ஜுன் 06 அன்று அனுசரிக்கப்பட்டது.
இவர் 1576 ஆம் ஆண்டு ஜுன் 18 அன்று அக்பர் பேரரசின் தளபதியான மான் சிங் தலைமைக்கு எதிரான ஹால்டிஹட்டி போரில் வல்லமையுடன் போரிட்டார். ஆனால் இவர் தோற்கடிக்கப்பட்டார்.
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ரோமிலா தாப்பர் அமெரிக்க தத்துவவியல் சமூகத்தின் (APS - American Philosophical Society) சர்வதேச உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். APS-ன் வருடாந்திர வசந்த காலச் சந்திப்பின் போது இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
APS என்பது பெஞ்சமின் பிராங்கிளின் என்பவரால் 1743 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமெரிக்காவின் ஒரு பழமையான கல்விச் சமூகமாகும். இவர் முதலாவது அமெரிக்கர் என்று அறியப்படுகின்றார். மேலும் இவர் அமெரிக்காவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் அறியப்படுகின்றார். அறிவுசார் தேடல் மற்றும் ஆழ்ந்த சிந்தனை ஆகியவை பொது மக்கள் நலனில் இன்றியமையாதவை என்று APS நம்புகின்றது.
ஒழுங்குமுறை மேற்பார்வைத் தவறுகளைக் குறைப்பதற்காக பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI - Securities and Exchange Board of India) ஆகிய இரண்டு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கிடையே “தகவல் பரிமாற்றத்திற்கான” அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
பெருநிறுவனத்தின் மோசடிகள் பொருளாதாரத்தின் முக்கியமானத் துறைகளைப் பாதிப்பதன் காரணமாக கண்காணிப்பிற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
புது தில்லியில் உள்ள கடலோரக் காவற்படைத் தலைமையகத்தில் கடலோரக் காவற்படையின் கீழ்நிலை அதிகாரிகளுக்கான 4-வது மாநாட்டை இந்திய கடலோரக் காவற்படைப் பொது இயக்குநர் இராஜேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
இவர் 2018 ஆம் ஆண்டில் மும்பையில் ஏற்பட்ட மழையின் போது ஒரு மூழ்கிக் கொண்டிருக்கும் பெண்மணியைக் காப்பாற்றுவதற்காக உயிர்காக்கும் கருவிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதற்காகவும் தனித்துவ மன உறுதியை அங்கீகரிப்பதற்காகவும் “நவீக் வினோத்” என்பவருக்கு “உத்தம் ஜீவன் ரக்சா பதக்” என்ற விருதினை வழங்கினார்.
சூடானின் தலைநகரான கார்டோமில் வன்முறை அதிகரித்து வருவதன் காரணமாக ஆப்பிரிக்க யூனியன் சூடானின் உறுப்பினர் தகுதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கொடியைத் தாங்கிச் செல்லும் பிரபல விமானமான இலங்கை ஏர்லைன்ஸ் தொடர்ந்து 2-வது முறையாக “உலகின் சிறந்த காலம் தவறாத ஏர்லைன்ஸாக” பெயரிடப்பட்டுள்ளது. இது மே மாதத்தில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தனது விமானங்களை குறித்த காலத்திற்குள் இயக்கியுள்ளது.
சர்வதேச விமான மேற்பார்வையாளர் நிறுவனமான “Flightstats” என்ற அமைப்பு இந்த அங்கீகாரத்தை அதற்கு வழங்கியுள்ளது.
தாய்லாந்தின் மேல்சபை மற்றும் கீழ்சபை இணைந்து நடத்திய பாராளுமன்ற வாக்கெடுப்பில் தாய்லாந்தின் 29-வது பிரதமராக ஜெனரல் பிரயூத் சன்-ஒ-சா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் இராணுவ எதிர்ப்புக் கட்சிகளுடைய கூட்டணியின் பிரதிநிதியாக விளங்கும் தாய்லாந்தின் எதிர்கால சீர்திருத்த முற்போக்குக் கட்சியின் தலைவரான தனதோர்ன் ஜூவன்ரோன்குரான்கிட் என்பவரைத் தோற்கடித்தார்.
செயின்ட் பீட்டஸ்பெர்க் இரயில் நிலையத்திலிருந்து இரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதி வழியாக நார்வே வரை செல்லும் முதலாவது சுற்றுலா இரயில், பயணிகளுடன் தனது பயணத்தைத் தொடங்கியது.
“சாரின்கோல்டு” என்று பெயரிடப்பட்ட இந்த இரயில் இரஷ்யாவினால் இயக்கப்படுகின்றது.
ஜப்பானின் புதிதாகப் பட்டம் சூட்டப்பட்ட பேரரசரான நருஹீட்டோவை சந்திக்கும் முதலாவது வெளிநாட்டுத் தலைவராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவெடுத்துள்ளார்.
அமெரிக்க நாவலாசிரியரான தயாரி ஜோன்ஸ், தனது நான்காவது புதினமான “அமெரிக்கத் திருமணம்” என்பதற்காக இந்த ஆண்டின் புனைவுப் பிரிவில் பெண்கள் விருதை வென்றுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள எழுதும் பெண்களைப் பெருமைப்படுத்துவதற்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஒரே வருடாந்திர புத்தக விருது இதுவாகும். இது 1996 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.