TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 10 , 2019 2000 days 703 0
  • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாநிலத்தில் அதிக மரங்களை வளர்க்கும் நோக்கத்துடன் மேகாலயா மாநில அரசானது “ஒரு குடிமகனுக்கு ஒரு மரம்” எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • மிகப்பெரிய யோகா தின நிகழ்வின் நடைபெறும் இடம், பங்கேற்பாளர்கள், நடத்துபவர்கள், பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள் இணைதல் ஆகியவை குறித்த விரிவான தகவல்களைப் பெற புவன் எனும் கைபேசி செயலியை ISRO ஆனது உருவாக்கியுள்ளது.
  • சினிமா உலகில் வழங்கிய தமது சிறந்தப் பங்களிப்பிற்காக புகழ்வாய்ந்த JC டேனியல் எனும் விருதிற்கு மலையாள நடிகையும் திரைப்பட இயக்குநருமான ஷீலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • 2005 ஆம் ஆண்டில் இவ்விருதினைப் பெற்ற அரண்முலா பொன்னம்மாவிற்கு பிறகு இவ்விருதினைப் பெறும் இரண்டாவது பெண்மணி இவரேயாவார்.
  • ஆந்திரப் பிரதேச மாநிலமானது மாநிலத்திற்குள் தேசியப் புலனாய்வு அமைப்பு நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிப் “பொது ஒப்புதலை” அளித்துள்ளது.
    • இந்த புதிய அரசாணையானது சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான அரசின் முந்தைய ஆணையை ரத்து செய்துள்ளது.
  • முகநூல் நிறுவனமானது முதல் ஊடாடும் விளையாட்டு நிகழ்ச்சியான “கான்ஃபெட்டி” என்ற நிகழ்ச்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஆஸ்திரியா நாட்டில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல் வரை ஆட்சி செய்யும் இடைக்கால அரசிற்கு அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான பிரிகிட்டி பியர்லெய்ன் என்பவரை அந்நாட்டின் முதல் பெண் தலைவராக ஆஸ்திரியாவின் அதிபர் நியமித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்