TNPSC Thervupettagam

355வது சட்டப்பிரிவின் செயலாக்கம்

May 8 , 2023 439 days 291 0
  • மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தோர்பங் பகுதியில் அனைத்துப் பழங்குடியின மாணவர் சங்கம் (ATSUM) ஏற்பாடு செய்திருந்த ‘பழங் குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு’ நிகழ்ச்சியின் போது வன்முறை வெடித்தது.
  • பழங்குடியினரல்லாத மெய்தே இனத்தவர்களுக்குப் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெற்றது.
  • இதன் காரணமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 355வது சட்டப்பிரிவானது அந்த மாநிலத்தில் செயலாக்கப்பட்டுள்ளது.
  • இதன் அடைப்படையில் மத்திய அரசானது, மாநில அரசிற்காக என்று ஒரு பாதுகாப்பு ஆலோசகரை நியமித்துள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் XVIIIவது பகுதியில் உள்ள 355வது சட்டப் பிரிவானது மிகவும் அரிதான சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட வேண்டிய சில அவசரகால விதிகளைக் கொண்டுள்ளது.
  • வெளிப்புறத் தாக்குதல் அல்லது உள்நாட்டுக் கலவரங்களுக்கு எதிராக மத்திய அரசு தலையிட்டு ஒரு மாநிலத்தினைப் பாதுகாப்பதற்கான அவசரகால விதிகளை இது வழங்குகிறது.
  • இதன்கீழ், ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
  • உட்பகுதி அல்லது வெளிப்பகுதி சிக்கல் என  எந்த வகையான அச்சுறுத்தலில் இருந்தும் ஒரு மாநிலத்தினைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த சட்டப் பிரிவு மத்திய அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது.
  • நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏதேனும் இடையூறு அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டால், அரசாங்கம் விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த விதிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்