TNPSC Thervupettagam

35வது ஆசியான் உச்சி மாநாடு

November 6 , 2019 1753 days 639 0
  • தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (Association of Southeast Asian Nations - ASEAN) 35வது உச்சி மாநாடு தாய்லாந்தின் பாங்காக்கில் தொடங்கியது.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு கூட்டமாகும்.
  • 35வது ஆசியான் உச்சி மாநாட்டின் கருத்துரு, “நிலைத் தன்மைக்காக கூட்டாண்மையை மேம்படுத்துதல்” என்பதாகும்.
  • ஆசியான் என்பது ஆசியப் பிராந்தியத்தில் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் 10 நாடுகளைக் கொண்ட ஒரு  குழுவாகும்.
  • இந்த அமைப்பில் உள்ள 10 உறுப்பு நாடுகளைத் தவிர, எட்டு உரையாடல் கூட்டாளர் நாடுகளும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றன.
  • ஆசியான் அமைப்பின் தலைமைப் பதவி அதன் பத்து உறுப்பினர் நாடுகளிடையே வருடாந்திரமாக மாறி வருகின்றது.
    • 2018 ஆம் ஆண்டின் தலைமை – சிங்கப்பூர்
    • 2019 ஆம் ஆண்டின் தலைமை – தாய்லாந்து

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்