36-வது சர்வதேச புவியியல் மாநாடு (IGC-International Geological Congress) வரும் 2020 ஆண்டு இந்தியாவில் உள்ள புதுதில்லியில் நடத்தப்பட உள்ளது.
60 ஆண்டுகள் கழித்து இம்மாநாடு இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.
மத்திய கனிமவள அமைச்சகம் மற்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கூட்டு நிதியளிப்பின் மூலம் இந்திய தேசிய அறிவியல் கழகம் (Indian National Science Academy) மற்றும் வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை போன்ற அண்டை நாடுகளின் அறிவியல் கழகங்களின் ஆதரவுடன் இம்மாநாடு நடத்தப்படுகின்றது.
சர்வதேச புவியியல் மாநாடு
சர்வதேச புவியியல் மாநாடு ஆனது உலகம் முழுவதும் உள்ள புவியியலாளர்கள் கூடும் மதிப்புமிக்க கூட்டரங்கமாகும்.
புவி அறிவியல் ஒலிம்பிக் என்றழைக்கப்படும் இம்மாநாடானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏல முயற்சியில் வென்ற நாடுகளில் சர்வதேச புவி அறிவியல் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுகின்றது.
35-வது சர்வதேச புவி அறிவியல் மாநாடு 2016ல் தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்றது.
சர்வதேச புவி அறிவியல் சங்கம்-IUGS
புவியியல் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஓர் சர்வதேச அரசு சாரா நிறுவனமே சர்வதேச புவி அறிவியல் சங்கமாகும் (International Union of Geological Sciences).
இது 1961-ல் பாரிஸில் அமைக்கப்பட்டது.
இதன் செயலகம் சீனாவின் பெய்ஜிங்கில் உள்ளது.
121 நாடுகளைச் சேர்ந்த தேசிய புவியியல் கழகங்களின் புவியியலாளர்கள் இந்த கழகத்தின் உறுப்பினர்களாக பிரதிநிதிப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
சர்வதேச புவி அறிவியல் திட்டத்திற்காக இந்த கழகமானது யுனெஸ்கோ அமைப்புடன் கூட்டிணைவை ஏற்படுத்தியுள்ளது.