TNPSC Thervupettagam

36வது SAARC சாசன நாள் - டிசம்பர் 08

December 14 , 2020 1355 days 712 0
  • 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற முதல் சார்க் உச்சி மாநாட்டில் சார்க் அமைப்பு நிறுவப்பட்டது.
  • தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC - South Asian Association for Regional Cooperation) என்பது தெற்காசியாவில் உள்ள பிராந்திய அரசுகளுக்கு இடையேயான அமைப்பு மற்றும் அப்பகுதி நாடுகளின் ஒரு புவிசார் அரசியல் கூட்டமைப்பாகும்.
  • இதன் உறுப்பு நாடுகள் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகும்.
  • இதன் செயலகம் நேபாளத்தின் காத்மாண்டுவில் அமைந்துள்ளது.
  • நேபாளமானது தற்போது சார்க் அமைப்பின்  தலைமைப்  பொறுப்பை வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்