குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ள 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் அவர்கள் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லடாக் மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகிய இரண்டு புதிய ஒன்றியப் பிரதேசங்கள் இந்த ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாகப் பங்கேற்க உள்ளது.
இந்த விளையாட்டு போட்டிகளின் முந்தையப் பதிப்பானது 2015 ஆம் ஆண்டில் கேரளாவில் நடைபெற்றது.