TNPSC Thervupettagam

36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022

October 18 , 2022 768 days 512 0
  • 2022 ஆம் ஆண்டில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை குஜராத் மாநிலம் முதல் முறையாக ஏற்பாடு செய்து நடத்தியது.
  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறந்த மாநிலப் பட்டத்தினை மகாராஷ்டிரா பெற்றது.
  • சஜன் பிரகாஷ் சிறந்த ஆண் தடகள வீரராக (5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம்) தேர்வு செய்யப் பட்டார்.
  • கர்நாடகாவைச் சேர்ந்த வெறும் 14 வயதே ஆன ஹஷிகா ராம்சந்திரா, 6 தங்கம் மற்றும் 1 வெண்கலத்துடன் சிறந்தப் பெண் தடகள வீராங்கனைக்கானப் பட்டத்தை வென்றார்.
  • குஜராத்தின் 10 வயது சௌர்யஜித் கைரே (மல்லகாம்ப்) விளையாட்டுப் போட்டிகளின் ‘அதிகம் புகழப்படும்’ நாயகராக உருவெடுத்து, பதக்கம் வென்ற இளம் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை கோவா நடத்த உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்