TNPSC Thervupettagam

36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்

September 9 , 2022 679 days 393 0
  • இது 2022 ஆம் ஆண்டு குஜராத் விளையாட்டுப் போட்டிகள் என்றும் அழைக்கப் படுகிறது.
  • அகமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் ஆகிய ஆறு நகரங்களில் இப்போட்டியானது நடைபெற உள்ளது.
  • குஜராத் மாநிலம் ஒரு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
  • 35வது தேசிய விளையாட்டுப் போட்டிகளானது கேரளாவில் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • முதலாவது இந்திய ஒலிம்பிக் போட்டிகளானது 1924 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு லாகூர் நகரில் நடத்தப் பட்டது.
  • இரண்டு புதியப் போட்டிகளாக யோகாசனம் மற்றும் மல்லகம்பா ஆகியவையும், கோ-கோ மற்றும் கபடி போன்ற உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளும் இதில் சேர்க்கப் பட்டுள்ளன.
  • கர்ஜனை செய்வது போன்ற சிங்க உருவமானது (ரோர் சவாஜ்) இந்தப் போட்டிக்கான ஒரு சின்னமாகும்.
  • இந்தப் போட்டிக்கான கீதமானது ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • "ஒற்றுமைக்கான விளையாட்டு" என்ற முழக்கத்துடன் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்