TNPSC Thervupettagam

37-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி - 2017

November 15 , 2017 2439 days 739 0
  • கடந்த நவம்பர் 14-ஆம் தேதி அன்று 2017ஆம் ஆண்டின் 37-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை (India International Trade Fair – IITF) இந்திய குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.
  • இக்கண்காட்சியை இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (India Trade Promotion Organisation – ITPO) ஏற்பாடு செய்துள்ளது.
நான்காவது ஹீனார் ஹாத்
  • நான்காவது ஹீனார் ஹாத் கண்காட்சியானது டெல்லியின் பிரகதி மைதானத்தில் இந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் 27 வரை நடத்தப்பெறும் 37வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி விழாவில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஹீனார் ஹாத் கண்காட்சியானது மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தால் உஸ்தாத் திட்டத்தின் (USTTAD) கீழ் நடத்தப்படுகிறது.
    • USTTAD – Upgrading the skills & Training in Traditional Arts / Craft for Development
    • மேம்பாட்டிற்காக பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களில் பயிற்சி மற்றும் திறனை மேம்படுத்துதல்
  • சிறுபான்மை சமூகத்தினரின் மரபுவழி கலை மற்றும் கைவினைத் தயாரிப்பில் பொதிந்துள்ள செறிந்த பாரம்பரியத்தை பாதுகாத்திடவும், மேம்படுத்திடவும் வகுக்கப்பட்டதே  இந்த USTAAD திட்டமாகும்.
  • தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நான்காவது ஹீனார் ஹாத் கண்காட்சியானது இதற்கு முன் நடத்தப்பட்ட பிற  ஹீனார் ஹாத்  கண்காட்சிகளைக் காட்டிலும்  தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்தக் கண்காட்சியில் முதன்முறையாக டெல்லி திகார் சிறைவாசிகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள்   காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்