TNPSC Thervupettagam

37வது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு, 2024

February 27 , 2024 143 days 176 0
  • மாகாணத் தலைவர்கள் சபை மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய (AU) அரசாங்கத்தின் 37வது அமர்வு ஆனது சமீபத்தில் எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் நிறைவடைந்தது.
  • இது 2024 ஆம் ஆண்டிற்கான ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (AU), "21 ஆம் நூற்றாண்டிற்குப் பொருந்தும் வகையில் ஆப்பிரிக்க மக்களுக்குக் கல்வி வழங்குதல்: ஆப்பிரிக்காவில் உள்ளார்ந்த, வாழ்நாள் முழுவதுமான, தரமான மற்றும் தொடர்புமிக்க கற்றலுக்கான அணுகலை அதிகரிப்பதற்கான மிகவும் நெகிழ்திறன் மிக்க கல்வி கட்டமைப்புகளை உருவாக்குதல்" என்ற கருத்துருவின் கீழ் நடத்தப்பட்டது.
  • இது உத்வேகத்தின் தசாப்தம் என்றும் அழைக்கப்படும் செயல்பாட்டு நிரல் 2063 என்ற இரண்டாவது 10 ஆண்டுகால (2024-2033) அமலாக்கத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது.
  • ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) என்பது 55 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஒரு கண்ட அமைப்பாகும்.
  • 1963 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவின் சுதந்திர நாடுகளால் ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு நிறுவப்பட்டது.
  • 2002 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு ஆப்பிரிக்க ஒன்றியமாக மாற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்