TNPSC Thervupettagam

37வது சியாச்சின் தினம் - ஏப்ரல் 13

April 17 , 2021 1231 days 449 0
  • 1984 ஆம் ஆண்டின் இந்த நாளில், ஆபரேஷன் மேகதூத் என்ற நடவடிக்கையைத் தொடங்கும் விதமாகப் பிலாஃபாண்ட் லா என்ற கணவாயில் இந்தியத் துருப்புக்கள் முதலில் மூவர்ணக் கொடியினை ஏற்றினர்.
  • காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறையின் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இந்திய ஆயுதப் படைகள் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின் குறியீட்டுப் பெயர் இதுவாகும்.
  • சியாச்சின் ஆனது உலகின் மிக உயர்ந்த போர்க்களமாகும்.
  • இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சியாச்சின் மோதலில் பிலாஃபோண்ட் லா கணவாய் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது.
  • லடாக்கில் உள்ள பிலாஃபோண்ட் லா கணவாய் ஆனது இந்திய துணைக் கண்டத்தையும் சீனாவையும் இணைக்கும் பண்டைய பட்டுவழிப் பாதையில் உள்ளது.
  • சால்டோரோ கணவாய் என்றும் அழைக்கப்படும் இது இமயமலையில் உள்ள சால்டோரோ முகட்டில் அமைந்துள்ள ஒரு மலைப்பாதை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்