உத்தரகாண்ட் மாநில அரசானது, வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளது.
38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான உருவச் சின்னம், முத்திரைச் சின்னம், ஆடை, கீதம், வாசகம் ஆகியவை டேராடூனின் ராய்ப்பூரில் வெளியிடப் பட்டன.
"மௌலி" என்று பெயரிடப்பட்ட இதன் உருவச்சின்னம் ஆனது, மோனல் எனப்படும் உத்தரகாண்ட் மாநிலப் பறவையின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
மோனல் என்ற பறவையினைக் கொண்டு உருவாக்கப்பட்ட முத்திரைச் சின்னம் ஆனது, உத்தரகாண்ட் மாநிலத்தின் இயற்கை அழகு மற்றும் பன்முகத் தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
விளையாட்டுப் போட்டிகளுக்கான வாசகம் “சங்கல்ப் சே ஷிகர் தக்” (From Resolve to Zenith) என்பதாகும்.