மதராஸ் தினம் என்பது தமிழ்நாட்டில் மதராஸ் நகரம் (தற்போது சென்னை) நிறுவப்பட்டதை நினைவு கூருவதற்காக வேண்டி ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் ஒரு கொண்டாட்டமாகும்.
1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியானது, கிழக்கிந்திய நிறுவனம் ஆனது மதராஸ் பட்டினம் அல்லது சென்னப் பட்டினம் கிராமத்தினை தாமர்லா வெங்கடாத்ரி நாயக்கரிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஒரு தேதி ஆகும்.
மதராஸ் நிறுவப் பட்டதற்கான முதல் கொண்டாட்டமானது 1939 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது.
சென்னை பாரம்பரியம் சார் அறக்கட்டளையினால் 2004 ஆம் ஆண்டு மதராஸ் தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் சமீபத்திய கருத்தாக்கம் ஆனது தொடங்கப்பட்டது.