TNPSC Thervupettagam

390 ஆண்டுகள் பழமையான தீபஸ்தம்பம்

February 13 , 2024 284 days 262 0
  • தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் காசி விஸ்வநாதருக்கென அர்ப்பணிக்கப் பட்ட கல்வெட்டுடன் கூடிய 390 ஆண்டுகள் பழமையான விளக்குக் கம்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • விளக்குகளுக்கான குழியங்களைக் கொண்ட 20 அடி உயர விளக்குக் கம்பத்தில் பொறிக்கப் பட்டுள்ள இந்தக் கல்வெட்டு ஆனது கி.பி.1635 என்று தேதியிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளின் கலவையில் பொறிக்கப்பட்டுள்ளது.
  • காசி விஸ்வநாத கடவுளுக்கான மரியாதை வணக்கத்துடன் தொடங்கும் இந்தக் கல்வெட்டு ஆனது வாலி முனுலய்யாவின் மகன் பொலினேடுவால் காசி விஸ்வநாத கடவுளுக்காக தூண் எழுப்பப்பட்டது குறித்த பதிவினைக் கொண்டுள்ளது.
  • இந்த விளக்கு கம்பம் ஆனது (20 அடி உயரத் தூண்) இந்த நகரத்தின் வழியாக பயணித்த வணிகர்கள் மற்றும் கப்பல்களுக்கான புவியியல் குறிகாட்டியாக இருந்திருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்