3-வது இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலின் (Indian Council for Cultural Relations) புகழ்பெற்ற இந்தியவியலாளர் விருதை (Distinguished Indologist Award) ஜப்பானைச் சேர்ந்த ஹிரோஷி மருயிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
இந்தியவியல் (Indology) துறைக்கு சிறந்த பங்காற்றியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
இவர் இந்திய மற்றும் புத்த ஆய்வுகளுக்கான ஜப்பானிய சங்கத்தின் தலைவராவார்.
இவர் ஜப்பானில் இந்தியவியலின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியுள்ளார்.
இந்தியவியல் என்பது இந்திய நாட்டின் வரலாறு, கலாச்சாரம், மொழி, இலக்கியம் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ளும் துறையாகும்.
இது ஆசிய கலாச்சார ஆய்வின் (Asian studies) துணை பிரிவாகும்.
ICCR மேன்மையான இந்தியவியலாளர் விருதானது 2015-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ICCR (Indian Council for Cultural Relations) அமைப்பால் வழங்கப்படும் விருதாகும்.
இவ்விருதோடு 20000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்படும்.
2015-ஆம் ஆண்டு முதல் ICCR இந்தியவியலாளர் விருது ஜெர்மனியின் ஹெயன்ரிச் ப்ரெய்ஹெர் வான் ஸ்டியெடென்காரன் என்பவருக்கும், 2016ல் சீனாவில் யூ லாங் யூ என்பவருக்கும் வழங்கப்பட்டது.