இந்தியத் தர நிர்ணய வாரியம் ஆனது, நவம்பர் 05 ஆம் தேதி முதல் தங்க நகைகள் மற்றும் தங்க வேலைப்பாடுகள் உள்ள கலைப்பொருட்களுக்கான நான்காவது கட்ட கட்டாயத் தரக் குறியீடிடல் நடவடிக்கையினைத் துவக்கியுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதியன்று, கட்டாய ஹால்மார்க்கிங் அறிமுகப் படுத்தப் பட்டதில் இருந்து, 40 கோடிக்கும் அதிகமான தங்க நகைகளுக்குத் தனிப்பட்ட அடையாளத்துடன் தரக் குறியீடு வழங்கப்பட்டுள்ளன.
இது நுகர்வோர் மத்தியில், சந்தை மீதான அதிக நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது.