TNPSC Thervupettagam

4வது தெற்காசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2024

September 17 , 2024 10 days 46 0
  • இந்தியா 4வது தெற்காசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியினை (2024) சென்னை ஜவஹர்லால் நேரு அரங்கில் நடத்துகிறது.
  • மகளிருக்கான 100 மீ ஓட்டத்தில் அபிநயா இராஜராஜன் தங்கப் பதக்கம் வென்றார்.
  • V.சுதீக்சா இதே நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் சித்தார்த் செளத்ரி தங்கப் பதக்கம் வென்றார்.
  • மகளிருக்கான 400 மீ ஓட்டத்தில் நீரு பஹ்தக் இந்திய அணிக்கான ஒன்பதாவது தங்கத்தினை வென்றார்.
  • மகளிருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பூஜா தங்கப் பதக்கம் வென்றார்.
  • மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் அனிஷா தங்கப் பதக்கம் வென்றார்.
  • ஆடவருக்கான 800 மீ ஓட்டத்தில் வினோத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் மிருத்யம் இராஜாராம் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்