TNPSC Thervupettagam

4வது தேசிய செரோ சர்வே

July 24 , 2021 1129 days 519 0
  • ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் தேசிய செரோ சர்வேயின் நான்காவது சுற்று நடத்தப்பட்டது.
  • SARS-CoV2 வைரஸ் ஆன்டிபாடிகள் இருப்பைக் கண்டறிய இந்தக் கணக்கெடுப்பின் கீழ் மொத்தம் 28,975 பேர் பரிசோதிக்கப் பட்டனர்.
  • இந்த செரோ சர்வே ஆனது 6-17 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் முதல் முறையாக உள்ளடக்கி உள்ளது.
  • ஆறு வயதிற்கு மேற்பட்ட வகையில் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இதில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவா மூலம் தெரிவிக்கப் பட்டது.
  • ஒட்டு மொத்த எண்ணிக்கையில் செரோபிரீவேலன்ஸ் (மக்கள் தொகையில் நோய்க் கிருமியின் நிலை) ஆனது 67.6 சதவிகிதம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • மூன்றாவது அலையானது இரண்டாவது அலை போல கடுமையாக இருப்பதற்கான வாய்ப்பை இது வெகுவாகக் குறைத்துள்ளது.
  • கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டவர்களின் மீதான செரோபிரீவேலன்ஸ் ஆனது 89.8 சதவீதமாக இருந்தது.
  • தடுப்பூசியின் ஒரு தவணையைச் செலுத்தியவர்களில் கூட இது 81 சதவீதமாக உள்ளது.
  • ஒரு தவணை கூட செலுத்தாதவர்களில் இது  62.3 சதவீதமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்