TNPSC Thervupettagam

4 ஆசியத் தேயிலை அறுவடைத் தளங்கள்

January 6 , 2021 1346 days 601 0
  • ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது (FAO) மூன்று நாடுகளில் 4 ஆசியத் தேயிலை அறுவடைத் தளங்களை உலக அளவில் முக்கியமான வேளாண் தளங்களாக (Globally Important Agricultural Sites - GIAHS) அறிவித்துள்ளது.
  • அவை பின்வருமாறு:
    • சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள பியூர் பாரம்பரிய தேயிலை வேளாண் அமைப்பு
    • பாரம்பரிய மரத் தாவர அமைப்புஜப்பான்
    • புசோவ்ஹ் மல்லிகைத் தேயிலைத் தளம்சீனா
    • பாரம்பரிய ஹடோங்க் தேயிலை வேளாண் அமைப்புதென் கொரியா
  • சீனாவில் உள்ள யுனான் மாகாணமானது உலகின் தேயிலைக்கான பிறப்பிடமாகக் கருதப் படுகின்றது.
  • உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தியாளர் நாடு சீனா ஆகும், அதே சமயம் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் தேயிலைப் பயிரிடலானது 19 ஆம் நூற்றாண்டில் தான் ஆங்கிலேயரால் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • தேயிலை ஆனது இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்